மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புரியாத ஒரு வார்த்தை... தர தரவென்று ஸ்டூடியோவை விட்டு வெளிய தள்ளிய... ஆரம்பகால சம்பவங்களை பகிர்ந்த ஜெய்பீம் மணிகண்டன்.!
இந்தியா பாகிஸ்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகியவர் மணிகண்டன். காலா திரைப்படத்தில் ரஜினியின் மகனாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ஜெய்பீம் என்ற திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது.
சூர்யா கதாநாயகனாக நடித்த அந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பார் மணிகண்டன். அந்தத் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் பேசப்பட்டது. அந்தத் திரைப்படத்திற்கு பிறகு இவர் ஜெய் பீம் மணிகண்டன் என்று அழைக்கப்படுகிறார்.
தற்போது இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் குட் நைட் என்ற திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திரை வாழ்க்கையில் துவக்க காலங்களில் தான் பட்ட கஷ்டங்களை ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் மணிகண்டன்.
சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக வந்த இவர் இந்தி படம் ஒன்றிற்கு டப்பிங் பேசுவதற்காக ஸ்டூடியோ சென்று இருக்கிறார். அங்கு அவர்கள் கூறிய ஒரு வார்த்தை இவருக்கு புரியவில்லை இதனைத் தொடர்ந்து இவர் கையில் 50 ரூபாய் கொடுத்து இனி டப்பிங் ஸ்டுடியோ பக்கமே வந்து விடாதே என விரட்டி இருக்கின்றனர். அதன் பிறகு ஒரு வருடங்களாக டப்பிங் பற்றிய நுட்பங்களை அறிந்து விட்டு டப்பிங் பேச துவங்கி இருக்கிறார். அந்த காலகட்டத்தில் தான் டப்பிங் பேசுவது இவ்வளவு கடினமான வேலை என்று தெரிந்து கொண்டதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.