ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
பிரபல மாடலுக்கு பாலியல் தொல்லை மீ டு புகாரில் நடிகர் கைது!

சமூக ஆர்வலர் மிருதுளா தேவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் வில்லன் நடிகர் விநாயகன் சரணடைந்தவுடனேயே பெயில் பெற்று திரும்பிவிட்டார்.
கேரளாவை சேர்ந்த மாடல் கொடுத்த பாலியல் புகாரை அடுத்து, பிரபல நடிகர் விநாயகன் நேற்று கைது செய்யப்பட்டார். தமிழில் தனுஷ், சிம்பு, விஷால் படங்களில் நடித்தவர் கேரள நடிகர் விநாயகன். தமிழில் திமிரு, சிலம்பாட்டம், மரியான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். விநாயகன் மிருதுளாதேவி சசீதரன் என்ற இளம்பெண்ணிடம் செல்போனில் தகாத முறையில் சாதீய ரீதியாக பேசியதாக சமூகவலைத்தளத்தில் மிருதுளாதேவி பதிவிட்டுள்ளார்.
மேலும், பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் விநாயகனை தொலைபேசியில் நான் அழைத்தபோது தன்னிடம் மிகவும் ஆபாசமாக பேசிய அவர், நானும் என் தாயும் சேர்ந்து அவர் விரும்பும்படி ஒத்துழைப்பு தர வேண்டும், என பாலியல் ரீதியாக என்னிடம் கோரிக்கை வைத்தார் என கூறி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார் மிருதுளாதேவி.
இந்தநிலையில் இந்த வழக்கில் விநாயகன் நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், பின்னர் ஜாமி னில் விடுதலை செய்தனர்.