மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரோட்டு கடைக்கு சென்று நடிகர் அருண் விஜய் செய்துள்ள காரியத்தை பாருங்க!! வைரலாகும் புகைப்படம்..
நடிகர் அருண்விஜய் ரோட்டுக்கடை ஒன்றில் மீன் வறுத்த காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அருண்விஜய். ஹீரோவாக அறிமுகமாகி, பின்னர் வில்லனாக தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் தற்போது மீண்டும் ஹீரோவாக படங்களில் கலக்கிவருகிறார். தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்துவருகிறார் அருண்விஜய்.
அண்மையில் கூட இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ராமேஸ்வரத்தில் நடைபெற்றபோது அருண்விஜய்க்கு காயம் ஏற்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பில் இருந்து விலகினார். இந்நிலையில் காயம் சரியாகி மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் அருண்விஜய், படப்பிடிப்பு தளத்தின் அருகே இருந்த ரோட்டு கடை ஒன்றுக்கு உணவருந்த சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், அந்த கடையில் மீன் வறுத்துக்கொண்டிருந்த அம்மாவை கட்டியணைத்தவாறு, அருண்விஜய் மீன் சுடும் காட்சிகளும் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.