மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 படத்திற்கு யுஏ சான்றிதழ்: படக்குழு அறிவிப்பு.!
நடிகர்கள் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மிஷன் சாப்டர் 1 (Mission Chapter 1).
விஜய் இயக்கத்தில், லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையில், சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவில் மிஷன் சாப்டர் 1 படம் தயாராகியுள்ளது.
நடிகை எமி ஜாக்சன் தமிழில் அறிமுகமான பின்னர், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டு நிலையில், காதல் மற்றும் குழந்தை என பிஸியாகிப்போன நடிகை, இப்படத்தின் மூலமாக மீண்டும் ரீ-எண்டரி கொடுத்துள்ளார்.
படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
படத்தை பார்த்துள்ள தணிக்கைக்குழு, படத்திற்கு யுஏ தரசான்றிதழ் வழங்கி இருக்கிறது.