#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்! ஆனால்?
சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வாரணம் ஆயிரம். 2008 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் அணைத்து பாடல்களும் மாபெரும் வெற்றிபெற்றன. இன்றுவரை இந்த படத்தின் பாடல்கள் பலரின் விருப்ப பாடல்களாக உள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்து ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்த படத்திற்கு கௌதம் மேனன் முதலில் வைத்த பெயர் சென்னையில் ஒரு மழைக்காலம். படத்தில் முதலில் நாயகியாக நடித்தவர் அசின். அசினை வைத்து ஒருசில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஒருசில காரணங்களால் அசின் இநத படத்தை விட்டு விளகியுள்ளார்.
அதன்பின்னர் நடிகை தீபிகா படுகோனே இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார், அதன் பின்னர் அவரும் இந்த படத்தைவிட்டு வெளியேறி ஹிந்தியில் ஓம் சாந்தி ஓம் படத்தில் கமிட் ஆனார். அதன்பின்னர் நடிகை ஆண்ட்ரியா இந்த படத்தில் ஒப்பந்தமாக பின்னர் அவரும் வெளியேறியுள்ளார்.
ஒருவழியாக நடிகை ஜெனிலியாதான் நடிகை என முடிவுசெய்யப்பட்டு படம் துவங்கும் நிலையில் ஜெனிலியாவும் படத்தை விட்டு வெளியேற கடைசியாக சமீரா ரெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டு படம் துவங்கப்பட்டது.
படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. நடிகை சமீராவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது வாரணம் ஆயிரம் திரைப்படம்.