மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புஷ்பா படத்தால் அப்படியெல்லாம் எதுவும் ஆகவில்லை.. என்ன நடிகர் பகத் பாசில் இப்படி சொல்லிட்டாரே!!
தெறிக்கவிட்ட புஷ்பா
சுகுமார் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம்தான் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இரண்டு பாகங்கள் கொண்ட இப்படத்தின் முதல் பாகம் 2021 ஆம் ஆண்டு வெளிவந்து சினிமா துறையை தெறிக்கவிட்டது. மேலும் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பட்டையை கிளப்பியது.
மிரட்டல் காட்டிய பகத் பாசில்
செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு வெளிவந்த இப்படத்தில் பகத் பாசில் வில்லத்தனமான போலீசாக, மொட்டை தலையுடன் மிரட்டலாக நடித்திருந்தார். புஷ்பா2: தி ரூல் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளதாம். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் பகத் பாசிலுக்கு அதிகமான காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஃபான் இந்தியா திரைப்படமாக வெளிவந்த புஷ்பா படத்தின் மூலம் தனக்கு கேரியரில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என பகத் பாசில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
புஷ்பா படம் உதவவில்லை
பேட்டி ஒன்றில் நடிகர் பகத் பாசிலிடம், புஷ்பா படம் பான் இந்திய நடிகராக உங்களை உயர்த்திகொள்ள உதவியாக இருந்ததா? என கேட்கப்பட்டது. அதற்கு அவர் இல்லை என கூறியுள்ளார். மேலும் இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. இதுகுறித்து இயக்குனர் சுகுமாரிடமே நேரடியாக நான் கூறியுள்ளேன். நான் அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு சுகுமார் மேலிருந்த அன்புதான் காரணம். என்னுடைய கவனம் முழுதும் மலையாள சினிமா மீதுதான் உள்ளது. பான் இந்தியா நடிகராக புஷ்பா திரைப்படம் என்னை உயரவைத்துள்ளது என்றெல்லாம் கூற முடியாது என கூறியுள்ளார்.