திருமணம் முடிந்த 2 மாதத்தில் சோகம்.. நீச்சல் தெரியாமல் ஊரணியில் விழுந்து தம்பதி பலி.! உறவினர்கள் கண்ணீர்.!



in Ramanathapuram Married Couple Dies 

புதுமணத்தம்பதிகள் உயிரிழப்பு குடும்பத்தினர், உறவினர்கள் இடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டுஊரணி, வைகை நகர் கிராமத்தில் வசித்து வருபவர் கார்த்திக் ராஜா (வயது 27). இவர் தாய்லாந்து நாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், சொந்த ஊர் வந்தார். 

ஊரணிக்கு குளிக்கச் சென்றனர்

மதுரையைச் சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 23). இவர்கள் இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்துக்கு பின்னர் தம்பதி வைகை நகரில் வசித்து வருகிறார்கள். நேற்று இருவரும் ஊரில் உள்ள ஊரணிக்கு குளிக்கச் சென்றனர். 

இதையும் படிங்க: கல்விச்சான்றிதழை தவறவிட்ட நபர்; ஓட்டுனரின் நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு.!

 

உறவினர்கள் சந்தேகம்

நீச்சல் தெரியாத தம்பதிகள் இருவரும் நீரில் இறங்கி விளையாடியதாக தெரியவருகிறது. அப்போது, இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட நேரம் ஆகியும், தம்பதிகள் வீட்டுக்கு வராததால், சந்தேகமடைந்த உறவினர்கள் ஊரணிக்கு வந்து பார்த்தனர்.

தம்பதி பலி

அங்கு இருவரின் உடமைகள் மட்டும் இருக்க, சந்தேகம் அடைந்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், ஊரணியில் இறங்கி தேடியபோது, இருவரின் சடலமும் மீட்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
 

இதையும் படிங்க: 7 வயது சிறுவன் கண்மாய் நீரில் மூழ்கி பலி.. பெற்றோர் கண்ணீர்.!