மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் இந்த பிரபல நடிகரா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகராக இருந்து வருபவர் ஜெய். இவர் தமிழில் முதல் முதலில் விஜய் நடிப்பில் வெளியான 'பகவதி' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் நடிப்பிற்கு என்று தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றனர்.
மேலும் இப்படத்திற்கு பின்பு கதாநாயகனாக சென்னை 60028, சுப்ரமணியபுரம், வாமணன், எங்கேயும் எப்போதும், கோவா, ராஜா ராணி, பலூன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார் ஜெய்.
ஆனால் ஒரு சில திரைப்படங்களில் தொடர் தோல்வி காரணமாக இவருக்கு தமிழில் சினிமா வாய்ப்புகள் பெரிதும் வரவில்லை. இதனால் இவர் வெப் சீரிஸ் பக்கம் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.
இது போன்ற நிலையில் நடிகர் ஜெய்யின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இப்புகைப்படத்தில் சாக்லேட் பாய் நடிகர் அப்பாஸ்சுடன் இணைந்து ஜெய் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.