மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அஜித்தினால் தான் எனக்கு இந்த நிலைமை" மனம் திறந்து பேசிய நடிகர் ஜெய்..
தமிழ் திரைதுறையில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து பிரபலமான நடிகராக அறியப்படுபவர் ஜெய். இவர் நடித்த ஒரு சில திரைப்படங்களுமே மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
ஜெய் நடிப்பில் வெளியான ஒரு சில திரைப்படங்கள் தோல்வி அடைந்தாலும் எங்கேயும் எப்போதும், சென்னை 28, ராஜா ராணி, சுப்பிரமணியபுரம் போன்ற திரைப்படங்களில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பேசப்பட்டு இன்றுவரை இந்த திரைப்படங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர் தோல்வி அடைந்து வருகின்றன. இது போன்ற நிலையில், யூடுபில் பேட்டியளித்த ஜெய் இவர் நடித்த 'சுப்ரமணியபுரம்' திரைப்படத்தை குறித்து பல சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
"சுப்ரமணியபுரம் திரைப்பட இயக்குனர் என்னிடம் கதையை கூறும் போது அதே சமயத்தில் 5 கதைகளை தேர்வு செய்து வைத்திருந்தேன். எனக்கு குழப்பமாக இருந்ததால் அஜித் சாருக்கு கால் செய்து கேட்டேன். அவர் கூறியதால் தான் 'சுப்ரமணியபுரம்' திரைப்படத்தில் நடித்தேன். அவரால் தான் எனக்கு இப்படி ஒரு நிலைமை. இப்போது வரை ரசிகர்கள் அந்த படத்தை பற்றி பாராட்டி வருகின்றனர்" என்று கூறி அஜித்தை பற்றி மிகவும் பெருமையாக பேசியிருந்தார் ஜெய். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.