வலியால் துடிதுடித்த நடிகர் கார்த்திக்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! ஏன்? அவருக்கு என்னாச்சு? பதறிய ரசிகர்கள்!!



actor karthi met accident while doing exercise

தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே அனைவர் மத்தியிலும் பிரபலமானவர் நடிகர் கார்த்திக். இவர் 80 மற்றும் 90 காலக்கட்டங்களில் ஏராளமான படங்களில் நடித்த முன்னணி ஹீரோவாக வலம் வந்தார்.

மேலும் நடிகர் கார்த்திக் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து வருகிறார். அவரது கைவசம் தீ அவன், அந்தகன் போன்ற படங்கள் உள்ளன. மேலும் தற்போதும் அவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

Actor Karthi

இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சி செய்த போது நடிகர் கார்த்தி எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வலியால் துடிதுடித்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்   கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலில் அறுவைசிகிச்சை செய்த அதே இடத்திலேயே மீண்டும் அடிபட்டுள்ளதாகவும், இதனால் எலும்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.