பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது.! ஜெயம் ரவிக்கு நடிகர் கார்த்தி கொடுத்த பதில்.!
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தற்போது குவாலியர் கோட்டையில் நடந்து வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில், தன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்து படமாக்கப்பட்டு விட்டதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். மேலும், இயக்குனர் மணிரத்னம் குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
Thank you for your blessings, your humour, your caring nature and above all for believing in me sir. I will truly miss being on set with you and look forward to the day to work with you again. Yours forever, PS.
— Jayam Ravi (@actor_jayamravi) August 25, 2021
அந்த பதிவில், தலைமை பண்பும், கற்றலும் ஒன்றோடொன்று இன்றியமையாதவை. இந்த பிரம்மாண்ட படைப்பை இவ்வளவு துல்லியத்தோடு நீங்கள் முன்னெடுத்து, அதே நேரத்தில் சுற்றியிருப்பவர்களுக்கும் கற்றுக் கொடுத்ததை பார்த்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். உங்களோடு படப்பிடிப்பு தளத்தில் மீண்டும் இருக்க முடியவில்லையே என்று நிச்சயம் வருந்துவேன்.
இளவரசே @actor_jayamravi நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது 😁
— Actor Karthi (@Karthi_Offl) August 25, 2021
இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம்.
- வந்தியத்தேவன்🐎🐎
#PS #PonniyinSelvan https://t.co/04wAQG9K8G
இதெல்லாம் என் தாயின் ஆசீர்வாதத்தோடு நடந்தது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் அம்மாவுக்கு வாழ்த்துக்கள் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி, "இளவரசே நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம் - வந்தியத்தேவன்” என்று குறிப்பிட்டுள்ளார்.