பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
மாரடைப்பால் உயிரிழந்த இளம் ரசிகரின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி, ஆறுதல் கூறிய நடிகர் கார்த்தி..!
ரசிகர் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனையடைந்த நடிகர் கார்த்தி, ஊருக்கு வந்ததும் ரசிகரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னையில் உள்ள திருவான்மியூரில் வசித்து வருபவர் வினோத் (வயது 29). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் நடிகர் கார்த்திக்கின் மிகப்பெரிய ரசிகர் ஆவார்.
இந்த செய்தி நடிகர் கார்த்திக்கை சென்றடைந்த நிலையில், அவர் வினோத்தின் மறைவின் போது வெளியூரில் இருந்துள்ளார். இந்நிலையில், சென்னை திரும்பிய அவர் வினோத்தின் இல்லத்திற்கு நேரில் சென்றார்.
அங்கு தனது ரசிகரான வினோத்தின் உருவப்படத்தை முன்பு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி, அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து தன்னால் இயன்ற உதவியை செய்துள்ளார்.