மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
44 ஆண்டுகளாக கல்வி சேவையில் நாங்கள்; படிப்பின் அவசியத்தை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டுள்ளனர் - நடிகர் கார்த்திக்.!
பழம்பெரும் நடிகர் சிவகுமார், கடந்த 1979ம் ஆண்டில் தனது 100 படவெளியீட்டின் போது சிவகுமார் கல்வி அறக்கட்டளையை தொடங்கினார். அதனை எம்.ஜி.ஆர் தொடங்கி வைத்தார். அன்றில் இருந்து கல்விக்கு பல உதவிகளை சிவகுமார் கல்வி அறக்கட்டளை வழங்கி வந்தது.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் சிவகுமார் கல்வி அறக்கட்டளையை பயின்று வரும் மாணவர்கள் 25 பேரின் மேல் படிப்புக்கு நடிகர் சூர்யா நிதிஉதவி வழங்கினார். பெற்றோரை இழந்த 12ம் வகுப்பு மாணவர்களின் மேல் படிப்புக்கு நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது நடிகர் கார்த்திக் பேசுகையில், "தற்போதைய காலகட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம் என்பது பலருக்கும் தெரிந்து இருக்கிறது. அனைவரும் படிக்கின்றனர். அம்மா, அப்பா நாளொன்றுக்கு ரூ.50 சம்பாதித்தால் கூட, அதனை சேமித்து குழந்தையை படிக்கச் வைக்க நினைக்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் கல்வி அவசியமாக உள்ளது. ஒருவர் படித்தால் அவரின் தலைமுறையே நன்றாக இருக்கும். கல்விச்செல்வத்தை கொடுப்பதை விட வேறெந்த செல்வமும் சிறந்தது இல்லை. அதனை வழங்கினால் தலைமுறை முன்னேறும் என்பதற்கு இந்த தலைமுறையே சாட்சி.
கடந்த 25 ஆண்டுகளாக சிவகுமார் அறக்கட்டளை நடத்தி முடித்து அகரமிடம் கொடுத்தார்கள். 44 ஆண்டுகளாக உதவித்தொகை என்பது வழங்கப்பட்டு பல மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கப்ட்டுள்ளது. மாணவர்கள் படித்தால் எதையும் சாதிக்கலாம். உங்களின் கவனத்தை சிதறவிட வேண்டாம்.
ஆரம்பத்தில் தலைசிறந்த மாணவர்கள் எங்கிருந்து வந்தாலும் அவர்களுக்கு மட்டுமே உதவினோம். பின்னர், தொலைதூர இடங்களிலும், கிராமப்புறங்களிலும், பின்தங்கிய குடும்பங்களிலும் நன்றாகப் படிக்கும் மாணவர்களை கண்டறிந்து உதவ முடிவு செய்தோம்" என பேசினார்.