மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் விஷேசம்... குடும்ப உறுப்பினர்கள் கோலாகலமாய் கொண்டாடிய வைரல் வீடியோ!
பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரின் பிறந்தநாள் வீடியோ ஒன்று இணையத்தலத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர். அண்ணன் ,தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் குடும்ப தொடரான இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் குமரன்.
மேலும் இவர் சரவணன் மீனாட்சி, கனா காணும் காலங்கள் உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் சில குறும்படங்களில் நடித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இவரது அமைதியான நடிப்பு, வித்தியாசமான பேச்சு ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் குமரன் பிறந்தநாளான இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப உறவினர்கள் அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.