மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேற லெவல்... தேசியளவில் மகன் படைத்த புதிய சாதனை.! பெருமையின் உச்சத்தில் நடிகர் மாதவன்.! வீடியோ..
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் நடிகர் மாதவன். அவர் இயக்கி,நடித்திருந்த ராக்கெட்ரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் மாதவனின் மகன் வேதாந்த். நீச்சல் வீரரான இவர் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற லித்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் பங்கேற்று வெண்கலம் வென்றார். கோபன்ஹேகனில் நடைபெற்ற டேனிஷ் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார். வேதாந்த் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் புவனேஸ்வரில் நடைபெறும் 48-வது ஜீனியர் நேஷனர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்று, தேசிய சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார். அதாவது 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் 16:01.73 விநாடிகளில் தூரத்தை கடந்து முன்னிருந்த ரெக்கார்டை முறியடித்துள்ளார்.
Never say never . 🙏🙏🙏❤️❤️🤗🤗 National Junior Record for 1500m freestyle broken. ❤️❤️🙏🙏@VedaantMadhavan pic.twitter.com/Vx6R2PDfwc
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 17, 2022
இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் நடிகர் மாதவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் அவர், முடியாது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி பலரும் மாதவன் மகன் வேதாந்திற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.