மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அந்த நடிகையை தான் தீவிரமாக காதலிக்கிறேன்" பிரபல நடிகர் மணிகண்டன் ஓபன் டாக்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் மணிகண்டன். இவர் தமிழில் ஆரம்ப நிலை குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் முதன் முதலில் 'இந்தியா பாகிஸ்தான்' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் மணிகண்டனின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து நேற்று நாளை, காதலும் கடந்து போகும், 8 தோட்டங்கள், காலா, ஜெய் பீம் போன்ற திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கதாநாயகனாக சில்லு கருப்பட்டி, ஏலே, பாவ கதைகள், சில நேரங்களில் சில மனிதர்கள், குட் நைட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதில் 'ஜெய் பீம்' திரைப்படம் மணிகண்டனின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியான 'குட் நைட் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்து ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது. இப்படத்திற்கு பின்பு தற்போது 'லவ்வர்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் லவ்வர் திரைப்படத்தின் புரோமோஷனிற்காக மணிகண்டன், வி ஜே சித்து என்ற பிரபலமான யூ டியூப் சேனலின் பேட்டியில் கலந்து கொண்டார். அங்கு நடிகர் மணிகண்டனுடைய காதலை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மணிகண்டன், "எனக்கு சிறுவயதில் நக்மாவை மிகவும் பிடிக்கும். திருமணம் செய்தால் நக்மாவை தான் திருமணம் செய்து இருப்பேன். இப்ப வரைக்கும் நக்மாவை காதலிக்கிறேன்" என்று மனம் திறந்து பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.