மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட 80ஸ் ஹீரோ... யார் அவர் தெரியுமா.?
தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வாரிசு திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிறைவடைந்தது. இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணணாக நடிக்க 80 களில் கொடி கட்டி பறந்த மோகன் அவர்களை முதலில் தேர்வு செய்துள்ளார் இயக்குனர் வம்சி. ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படத்தில் மோகனால் நடிக்க முடியாமல் போயுள்ளது. நடிகர் மோகன் தற்போது ஹரா எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.