மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லிப் - லாக் காட்சிகள்! வீட்டில் வெடிக்கும் தகராறு!! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகர் நானி!!
நான் ஈ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் நானி. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அவர் தற்போது ஹாய் நான்னா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சௌரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக சீதா ராமம் படத்தில் நடித்த நடிகை மிருணாள் தாகூர் நடித்துள்ளார்.
இப்படம் வரும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஹாய் நான்னா திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், நானி மற்றும் மிருணாள் தாகூர் இடையே அதிகமான லிப் லாக் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் நானியிடம் ரசிகர் ஒருவர், நீங்கள் நடித்த எல்லா படத்திலும் லிப்லாக் காட்சிகள் உள்ளது. நீங்கள்தான் அப்படி வைக்க சொல்லுவீர்களா?? என கேட்டுள்ளார். அதற்கு அவர், எனது எல்லா படங்களிலும் லிப்லாக் காட்சிகள் கிடையாது. சில படங்களில் மட்டுமே இருக்கும். அது மாதிரியான காட்சிகளில் நடிக்கும் போதெல்லாம் எங்கள் வீட்டில் தகராறு நடக்கும். ஆனால் கதைக்கு அவசியமாக தேவைப்படும்போதே அது போன்ற காட்சிகளில் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.