மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஹாய் நன்னா பட ப்ரமோஷனா?! நானியின் கூலான போட்டோஸ்!"
நடிகராகவும், தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் இருப்பவர் நானி. 2008ம் ஆண்டு தெலுங்கு காதல் நகைச்சுவைத் திரைப்படமான "அஷ்டசம்மா"வில் அறிமுகமானார். தெலுங்கில் சிறந்த நடிகருக்கான இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
நானி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "வால் போஸ்டர் சினிமா"வை 2018ம் ஆண்டு தொடங்கினார். இதன் மூலம் பல வெற்றிப்படங்களையும் தயாரித்துள்ள நானி, தெலுங்கில் முன்னணி நடிகராகவும் உள்ளார். மேலும் தெலுங்கில் பிக் பாஸ் இரண்டாவது சீசனையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் ஷூர்யுவ் இயக்கத்தில் நானி மற்றும் மிருனாள் தாகூர் நடித்துள்ள "ஹாய் நன்னா" திரைப்படம், வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நானி, இப்போது தன்னுடைய சில கூலான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுவும் பட ப்ரமோஷனுக்காக என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.