மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பிறைநிலவு வானில் இருந்து"... ஐஸ்வர்யா ராயை கவிதையால் புகழ்ந்துதள்ளிய பார்த்திபன்.. ஏன் தெரியுமா?..!
கல்கி எழுதிய நாவலைத் தழுவி, இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று தெரிவித்திருந்த நிலையில், பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், பார்த்திபன், சரத்குமார், ஜெயம் ரவி, ஜெயராம் மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அத்துடன் இப்படத்தின் பாடல் மற்றும் ப்ரோமோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளிலும் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் நடிகை ஐஸ்வர்யாராய் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கவிதையில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அந்த பதிவில், "ஐஸ் வாரியம் ! கற்றுக் கொள்ள…. காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில். அப்படி இப்பெண்ணிடமிருந்து… தாயானப் பிறகும்,தான் விரும்பும் கலையை தொடர, ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும்,விடா பயிற்சியும் செய்கிறார்.
அழகென நான் காண்பது… பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர் வசனங்களை (இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து one more கேட்கா egoவுடன் தயாராகிவிட்டு,பின் அனைவரிடமும் (selfie) அன்பொழுக பழகுகிறார்" என்று அவரது செயல்களை கண்டு வியந்து புகழ்ந்துள்ளார்.
ஐஸ் வாரியம் !
கற்றுக் கொள்ள….
Posted by Parthiban Radhakrishnan on Sunday, 25 September 2022
காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது...