திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Google map location ஏதுமின்றி!! பால் சுரக்கும் காம்பறிந்து!! ஆஹா!! அருமையான பதிவு சார்!! பார்த்திபனின் அன்னையர்தின நெகிழ்ச்சி பதிவு!!
உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டப்படுகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் அனைவரும் தாய்மையின் அன்பையும், அவர்களது தியாகத்தையும் போற்றி, புகழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அவர்கள், தாய்மையை போற்றும்விதமாக அழகான கவிதை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
கருவானது ஒரு தாயால்,
உருவானது பல கருணையால்,
உயர்வானது தாய்மையால்! நான்
உணர்வது இதுவே!
கருணைத்தாய்
தெய்வத்தாய்
தாய்
மூன்றல்ல ஒன்றே
Google map location
ஏதுமின்றி
பால் சுரக்கும்
காம்பறிந்து
சிசு பசியாறுகிறது!
பால் சுரக்க
மார்பென்றாலும்-அன்
பால் சுரப்பது அவள்
மனம்! குணம்!
பூனைக்குட்டிகளுக்கு
பாலூட்டும் புகைப்படத்தில்
இருந்ததொரு நாய்-அதில்
நான் கண்டதோ ஒரு தாய்
தா'எனாமல்
தானாகத் தருபவளே
தாய்
என்னைப் பெற்றவள் மட்டுமல்ல
எல்லைகள் அற்றவளே தாய்
என்னைப் பெற்றவளும்
என்னால் பெற்றவளும்
பெண்ணாய் பெற்றதும்
எனக்குத் தாயே
தாயன்பு
தரமான ஆக்ஸிஜன்!
இப்பேரிடர் காலத்தில்
ஆக்ஸிஜன் வழங்கும் அரசும் நல் உள்ளங்களும்
ஆக்ஸிஜனாய் இயங்கும் மருத்துவர்களும் தாயே!
பல் முளைக்கா பார்ட்டி முதல்
பல் செட் பாட்டிகள் வரை
ஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும்-என்
தாய் தின வாழ்த்துகள்!