மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவுடன் இணையும் நடிகர் பிரபாஸ்; அதிரடி அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களை இயக்கி தற்போது சர்வதேச அளவில் அடையாளம் பெற்றுள்ள இயக்குனர் சந்திப் ரெட்டி வாங்கா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கியிருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இதனை தொடர்ந்து ஹிந்தியில் கடந்த 2019-ம் ஆண்டு சாகித் கபூரை கதாநாயகனாக கொண்டு வெளியான கபீர் சிங் திரைப்படமும் நல்ல வெற்றியை அடைந்தது. இந்த இரண்டு படங்களுக்கு பின்னர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடத்து வெளியான அனிமல் திரைப்படத்தை இவர் இயக்கி வழங்கியிருந்தார்.
Director @imvangasandeep's next film was #Prabhas's #Spirit. After that, #AnimalPark will go on the sets.💥
— iDream Media (@iDreamMedia) December 25, 2023
- Producer @VangaPranay
Watch Full Interview▶️https://t.co/Q6rhgrIUrt#AnimalTheFilm #PranayReddyVanga #SandeepReddyVanga #iDreamMedia pic.twitter.com/0FV0xhfu9S
இந்த திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து வசூலை குவித்து வருகிறது. இந்த படங்களுக்கு பின்னர் சந்திப் அடுத்து யாருடன் கைகோர்க்க உள்ளார்? என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் இயக்குனர் சந்திப் ரெட்டி வாங்கா, நடிகர் பிரபாஸ் உடன் ஸ்பிரிட் திரைப்படத்தில் பணியாற்ற உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர் பிரணய் வாங்கா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால் நடிகர் பிரபாஸின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.