பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடிகர் பிரபுதேவாவா இது! என்ன 2வது கல்யாணத்திற்கு பிறகு இப்படி ஆகிட்டாரே! செம ஷாக்கான ரசிகர்கள்!!
தென்னிந்திய சினிமாவுலகில் தனது அசத்தலான நடனத்தால், நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் கட்டிப் போட்டவர் நடிகர் பிரபுதேவா. நடன இயக்குனர், நடிகர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கும் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நடிகர் பிரபுதேவா 1995ஆம் ஆண்டு ராம்லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா, ஆதித் தேவா என 3 மகன்கள் இருந்தநிலையில் மூத்த மகனான விஷால் 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார். பின்னர் ராம் லதா மற்றும் பிரபுதேவா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
இந்நிலையில் பிரபுதேவா அண்மையில் தனது தோழியான ஹிமானி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் பிரபுதேவாவின் புகைப்படங்களை நடிகை சார்மி வெளியிட்ட நிலையில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் பிரபுதேவாவா இது? மொட்டை தலையுடன் வித்தியாசமா மாறிட்டாரே என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.