மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
28 ஆண்டுகள் கழித்து ரஜினி ரசிகர்களுக்கு உற்சாக செய்தி; ரீரிலீஸ் செய்யப்படும் பிளாக்பஸ்டர் திரைப்படம்.! விபரம் இதோ.!
கடந்த 1995 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் முத்து. ரஜினிகாந்தின் திரையுலக பயணத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற முத்து திரைப்படம், சீனா-ஜப்பான் போன்ற நாடுகளிலும் வெளியாகி சர்வதேச அளவில் வசூலை வாரிக்குவித்தது.
இப்படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு, ரகுவரன், ராதாரவி, பொன்னம்பலம், செந்தில், வடிவேலு, காந்திமதி, ஜெயபாரதி, விசித்ரா, டைகர் பிரபாகர், குமரிமுத்து, பாண்டு, ரமேஷ் கண்ணா, பிரபாகர் உட்பட பலரும் நடித்திருக்கின்றனர்.
#2point0inJapan
— Satheesh (@Satheesh_2017) October 25, 2019
☑️ "#ஜப்பானை" பொறுத்த வரை, இன்று வரை அசைக்க முடியாத வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் ஒரே இந்திய நடிகர் #ரஜினி தான்
☑️ "#முத்து" திரைப்படம் ஜப்பானில் ஏற்படுத்திய வசூல் சாதனையை இது வரை எந்த ஒரு இந்திய திரைப்படங்களும் முறியடிக்கவில்லை
பாகுபலி உட்பட ...#தலைவர் 💪 pic.twitter.com/pi7dUnW2pf
இப்படம் கடந்த 1995 அக்டோபர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் படத்தை தயாரித்து வழங்கிய கவிதாலயா பிலிம்ஸ் நிறுவனம், தற்போது படத்தை டிஜிட்டல் நிலைக்கு மாற்றி, ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்தில் இப்படம் ரிலீஸ் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.