மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் இடம்பெற்ற நடிகர் ராம் சரண்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
திரைப்படத் துறையில் பணியாற்றுவோருக்கு ஆஸ்கர் விருது என்பது, அவர்களின் வாழ்நாட்களில் கிடைக்கபோராடும் உயரிய விருது ஆகும். இதனை பெறவேண்டும் என ஒவ்வொரு திரைப்பட கலைஞருக்கும் ஆசை இருக்கும்.
சமீபத்தில் கடந்த ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டுக்கூத்து பாடல் ஆஸ்கரில் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டது. இதனைப்பெற படக்குழு மற்றும் நடிகர் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., இயக்குனர் ராஜமவுலி ஆகியோர் நேரில் சென்றனர்.
இந்நிலையில், நடிகர் ராம் சரண் ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் சேர்க்கப்ட்டுள்ளது. இது தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்திய திரைஉலகையும் பெருமைப்பட வைத்துள்ளது. இந்த செய்தி ராம் சரணின் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.