பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சோனியா அகர்வாலிடம் செருப்பால் அடி வாங்கிய ஹீரோ ரவி கிருஷ்ணா.! என்ன நடந்தது? வெளிவந்த சீக்ரெட்!!
கடந்த 2004ஆம் ஆண்டு செல்வராகன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் செட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளிவந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. இந்நிலையில் படம் வெளியாகி 19 ஆண்டுகள் ஆனநிலையில் தற்போது 7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.
இந்நிலையில், 7ஜி ரெயின்போ காலனி ஷூட்டிங் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகர் ரவி கிருஷ்ணா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது படத்தில் சோனியா அகர்வாலை காதலிக்க வைக்கவேண்டும் என ஹீரோ ரவி கிருஷ்ணா அவர் பின்னாடியே சுற்றுவார். அவ்வாறு பேருந்தில் ஏறி அவரது பின் நிற்பார். அப்பொழுது திடீரென பஸ்ஸில் பிரேக் போட சோனியா அகர்வாலின் மேல் ரவி கிருஷ்ணா கை வைத்துவிடுவார். இதனால், ஆத்திரமடைந்த அவர் கோபத்துடன் செருப்பை கழட்டி ரவி கிருஷ்ணாவை அடிப்பார்.
இந்த காட்சி எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இயக்குனர் செல்வராகவன் சோனியா அகர்வாலிடம் ஹீரோ ரவி கிருஷ்ணாவை உண்மையாகவே செருப்பால் அடிக்க கூறியுள்ளார். இந்நிலையில் சோனியா ஒரே டேக்கிலே அதை செய்து முடித்துவிட்டார். இல்லையெனில் பல முறை நான் செருப்பால் அடிவாங்கியிருப்பேன் என பேட்டி ஒன்றில் ரவி கிருஷ்ணா கூறியுள்ளார்.