மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போதை தலைக்கேறி, வேட்டி அவிழ்ந்து ரோட்டில் விழுந்த பிரபல தமிழ் நடிகர்! வைரலாகும் வீடியோ.!
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநராக பிரபலமானவர் பி. வாசு. இவரது மகன் சக்தி. இவர் சின்னத்தம்பி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தொட்டால் பூ மலரும் படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், அதற்கு பிறகு நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
அதை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று ’ட்ரிக்கர் ஸ்டார்’ சக்தி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் நடிகர் சக்தி நேற்று மதியம் சூளைமேடு இளங்கோவடிகள் நகரில் தனது காரில் சென்றுக்கொண்டிருந்தபோது சாலையில் நின்றுக்கொண்டிருந்த காரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை விரட்டி சென்று பிடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசாரிடமும் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை விடுவித்தனர்.
இச்சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.