மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனாவால் பலி! ஆர்யா மனைவி சாயிஷாவின் குடும்பத்தில் நேர்ந்த சோகம்! சோகத்தில் குடும்பத்தினர்!
பாலிவுட் சினிமாவின் பழம்பெரும் நடிகரான திலீப் குமாரின் தம்பிகள் இஹ்சான் கான் மற்றும் அஸ்லாம் கான். நடிகர் திலீப் குமார் நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயீஷாவின் தாத்தா ஆவார்.
இந்நிலையில் 90 வயது நிறைந்த இஹ்சான் கான் மற்றும் 88 வயது நிறைந்த அஸ்லாம் கான் இருவரும் கடுமையான மூச்சு திணறல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கும் கொரோனா நோய் இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும் வயது மூப்பு காரணமாக இருவரும் உடல்நிலை மோசமாகி கவலைக்கிடமாக இருந்து வந்தனர். இந்நிலையில் இளைய சகோதரரான அஸ்லாம் கான் உயர் ரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சனைகள் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.