ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
அட.. அப்படியே அப்பா மாதிரியே இருக்காரே! சினிமாவில் ஹீரோவாகும் நடிகர் செந்திலின் டாக்டர் மகன்!! வைரல் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் எவர் கீரின் நகைச்சுவை நடிகராக விளங்கியவர் செந்தில். காமெடி என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கவுண்டமணி– செந்தில் காம்போ தான். அவர்களது நடிப்பு அனைவராலும் ரசிக்கும் வகையில், வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் வகையில் இருக்கும்.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர்ஹிட் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் செந்தில் தற்போது தடை உடை என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் ஹீரோவாக பாபி சிம்ஹா நடிக்கிறார். நடிகர் செந்திலுக்கு இரு மகன்கள் உள்ளனர். அதில் மூத்தவரான மணிகண்டபிரபு மருத்துவர் ஆவார்.
இந்நிலையில் அவர் தற்போது தன் தந்தையின் படத்திலேயே நடிகராக அறிமுகமாகிறார். மேலும் படத்தில் நடிகர் செந்திலுக்கு மகனாகவே அவர் நடிக்கஉள்ளாராம். இதன் மூலம் செந்தில் குடும்பத்திலிருந்து மற்றொரு கலைவாரிசு உருவாகியுள்ளது. செந்தில் தன் மகன் மற்றும் நடிகர் பாபி சிம்ஹாவுடன் இருக்கும் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.