மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காமெடி நடிகர் செந்திலுக்கு ஆரம்பத்தில் சம்பளம் எவ்வளவு.? அவரே கூறிய பதில்!
செந்தில், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர்.
காமெடி நடிகர் செந்திலை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். 1990ஸ் கிட்ஸ்களுக்கு கவுண்டமனி – செந்தில் காமெடியை இன்றைக்கும் மறக்கமாட்டார்கள். கவுண்டமனிகிட்ட சந்தேகம் கேட்டு கேட்டு அடி வாங்குவதில் செந்திலை மிஞ்ச யாருமில்லை.
இந்தநிலையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் செந்திலிடம் தொகுப்பாளர்கள் உங்களின் ஆரம்பகால படத்தில் உங்களின் சம்பளம் எவ்வளவு? அந்த சமயங்களில் ஒரே நாளில் எத்தனை படங்களில் நடிப்பீர்கள் என கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த காமெடி நடிகர் செந்தில், நான் ஆரம்பத்தில் படம் நடிக்கும்பொழுது 5000 முதல் 10 ஆயிரம் வரை கிடைத்தது, அதேபோல் ஒருநாளைக்கு 2,3 படங்களில் நடிக்கும் சூழ்நிலையும் ஏற்படும் என தெரிவித்தார்.