"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
வர்றான், சுடுறான் ரிபீட்டு.. மாநாட்டின் வடிவேலு காமினேஷன் வீடியோ வைரல்.!
நடிகர் சிலம்பரசன், இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் டைம் ட்ராவல் லூப்பிங் முறையில் கதைக்களம் அமைக்கப்பட்டு படம் வெளியானது.
திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், பலகட்ட பிரச்சனைகளுக்கு பின்னர் மாநாடு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு பெற்ற நிலையில், நடிகர் சிம்புவுக்கு நீண்ட வருடங்களுக்கு பின்னர் நல்ல கம்பேக் கொடுக்கும் வாய்ப்பையும் அமைத்து கொடுத்தது.
இந்நிலையில், இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் காட்சிகளை நெட்டிசன்கள் வடிவேலு நடித்துள்ள காட்சிகளை இணைத்து உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.