திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசிவாங்கிய சிவகார்த்திகேயன்; இன்று வெளியாகிறது மாவீரன் படத்தின் டிரைலர்.!
சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஸ்கின், யோகிபாபு, சரிதா உட்பட பலர் நடித்து, ஜூலை 14ம் தேதி திரைக்கு வரவுள்ள திரைப்படம் மாவீரன்.
இந்த படத்தை அஸ்வின் மடோனாஸ் இயக்கியுள்ளார், பரத் சங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் இன்று சென்னை சாய்ராம் கல்லூரியில் வைத்து வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில், இன்று காலை நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன், தனது படத்தின் டிரைலர் வெளியீட்டு நாளில் ரஜினியை சந்தித்தது கவனத்தை பெற்றுள்ளது.