மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாவீரன் பட இயக்குநரை பற்றி கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்.. பத்திரிகையாளர் சந்திப்பின் போது கடுப்பான சிவகார்த்திகேயன்.?
மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'மாவீரன்'. சாந்தி டாக்கீஸ் தயாரித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவதையொட்டி இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதுபோன்ற நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள '1947 ஆகஸ்ட் 16' என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறியதாவது; மாவீரன் படத்தில் எனது பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இன்னும் சில தினங்களில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும். அடுத்து கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளேன்.
சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வரவிருக்கும் மற்றுமொரு படமான 'அயலான்' திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவ்வருட இறுதிக்குள் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 'மாவீரன்' திரைப்படம் தான் முதலில் ரிலீஸ் ஆகும். இப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பத்திரிக்கையாளர் சிவகார்த்திகேயனிடம் கேட்ட போது அந்த தகவல் உண்மை இல்லை என்று கோபத்துடன் செய்தியாளர்களிடம் கூறினார்.