குடும்பத்துடன் கொலை செய்திடுவேன் - பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.!
அந்த மனசுதாங்க கடவுள்.. மக்களுக்கு உதவ களத்தில் இறங்கிய கார்த்திக் & சூர்யா: ரூ.10 இலட்சம் நிதியுதவி.!
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழையானது பெய்து வந்தது. தற்போது மழை குறைந்து விட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் தன்னார்வலர்கள் பலரும் தங்களை மீட்பு பணிகளில் ஈடுபடுத்தி மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். மின்னிணைப்புகள் வழங்கவும், போக்குவரத்தை சரி செய்யவும் துரிதமுறையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியிருக்கின்றனர். தனது ரசிகர் மன்றத்தின் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உணவு வழங்கவும் இவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.