மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கர்ணனாக சூர்யா?.. மகாபாரத கதையில் மாஸ் காண்பிக்கப்போகும் நாயகன்..!
பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் மஹாபாரதத்தினை மையமாக கொண்ட திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நடிகர் சூர்யா கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, சுதா கொங்கராவின் படத்திலும், வெற்றிமாறனுடன் வாடிவாசல் திரைப்படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.