மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீங்க தோத்துடீங்க சூர்யா.. வாயில என்னது அது? - சூர்யாவுக்கு எதிராக கொந்தளித்த பெண் அரசியல்புள்ளி..!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து வரும் சூர்யாவின் 44 (Surya 44) வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்படத்தின் இரண்டாவதுகட்ட கிலிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி வைரலாகின. அதில் நடிகர் சூர்யா வாயில் சிகிரெட்டுடன் தனது அடியாட்களுடன் வருவதுபோல காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
ராஜேஸ்வரி பிரியா கண்டனமும்
இந்நிலையில், ராஜேஸ்வரி பிரியா தனது கண்டனப்பதிவில், "சிகரெட் காட்சிகளை மையப்படுத்தி நடித்து இளைய சமுதாயத்தை பாழ்படுத்தும் சினிமா நடிகர்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் சூர்யா அவர்கள் தனது சொந்த தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரே வைக்காத புதிய படத்தின் டீசர் காட்சியில் சிகரெட் புகைத்தபடி வருவது கேடு கெட்ட காட்சியாக உள்ளது.
An unveiling maverick, ready to conquer 🔥
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 22, 2024
Join the frenzy for #LoveLaughterWar and beyond!
Happy Birthday THE ONE ❤️🔥#HappyBirthdaySuriya #HBDTheOneSuriya
Wishes from team #Suriya44@Suriya_Offl @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @rajsekarpandian @kaarthekeyens… pic.twitter.com/JlxJnJB77E
இதையும் படிங்க: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் தி பயர் பாடல் வெளியீடு; இப்போதே கேட்டு மகிழுங்கள்.!
உங்கள் தம்பி நடிகர் கார்த்தி அவர்கள் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று கொள்கை பிடிப்போடு உள்ளார். உங்கள் அப்பா ஒரு பிள்ளைக்கு நல்லது சொல்லி கொடுத்து உங்களுக்கு சொல்லி கொடுக்க மறந்துவிட்டாரா? அல்லது தந்தை சொல்லை மதிக்கவில்லையா?
உங்கள் அறக்கட்டளையின் மூலம் படிக்கும் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா? உங்கள் நடிப்பை நம்பாமல் எப்போது சிகரெட்டை நம்பினீர்களோ அப்போதே நடிகராக தோற்று போய்விட்டீர்கள் சூர்யா" என கூறியுள்ளார். இவரின் பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் என ட்விட்டர் வட்டாரம் பரபரப்பாகி இருக்கிறது.
யார் இந்த ராஜேஸ்வரி
பாட்டாளி மக்கள் கட்சியின் வாயிலாக அரசியல் அடையாளத்தை பெற்ற ராஜேஸ்வரி பிரியா, திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் ஆவார். பாமகவுடன் அரசியல் பயணத்திற்கு பின்னர், பின்னாளில் கட்சியில் எழுந்த சில சர்ச்சைகள் காரணமாக அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற இயக்கத்தை தொடங்கி அதன் நிறுவனராகவும், தலைவராகவும் தற்போது செயல்பட்டு வருகிறார்.
சிகரெட் காட்சிகளை மையப்படுத்தி நடித்து இளைய சமுதாயத்தை பாழ்படுத்தும் சினிமா நடிகர்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் சூர்யா அவர்கள் தனது சொந்த தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரே வைக்காத புதிய படத்தின் டீசர் காட்சியில் சிகரெட் புகைத்தபடி…
— ராஜேஸ்வரி பிரியா (@Rajeswaripriya3) July 23, 2024
இதையும் படிங்க: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் தி பயர் பாடல் வெளியீடு; இப்போதே கேட்டு மகிழுங்கள்.!