மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட நம்ம சூர்யாவா எப்படி ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே.. என்ன காரணம் தெரியுமா.?
கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்து வரும் சூர்யா பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றி திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்க்கு அளித்து வருகிறார். தற்போது குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி இருக்கிறார் சூர்யா.
மேலும், மும்பையில் சூர்யா சில பிஸ்னஸ்கள் செய்து வருவதாகவும், விமான நிலையத்தில் கார் பார்க்கிங் ஏலம் எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மும்பையில் செட்டிலாகி இருக்கும் நடிகர் சூர்யா 68 கோடி மதிப்புடைய பிரமாண்ட வீடு ஒன்று அங்கேயே வாங்கி உள்ளார்.
இது போன்ற நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் சூர்யா, ஜோதிகா தம்பதியினர் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சூர்யா ஆளே அடையாளம் தெரியாமல் குண்டாகிவிட்டார் என்பது போன்ற கமெண்ட்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனை அறிந்த திரைத்துறையினர் 'கங்குவா' படத்தின் லுக்கில் இருக்கிறார் என்று தெரிவித்து இருக்கின்றனர்.