மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இயக்குனர் வெற்றிமாறனுடன் விரைவில் கைகோர்க்கும் நடிகர் விஜய் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தமிழ் திரையுலகில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் இளைய தளபதி விஜய். இவரை ரசிகர்கள் அண்ணா, தலைவா, தளபதி என்று அன்போடு அழைப்பார்கள். இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவர் முக்கியமானவர்.
கடந்த சில ஆண்டுகளாகவே பொதுநல பண்புடன் மக்களுக்கும், தனது ரசிகர்களுக்கும் பல்வேறு அரசியல் ரீதியான கருத்துக்களுடன் வாழ்க்கை கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில், அவர் இயக்குனர் வெற்றிமாறனுடன் விரைவில் கைகோர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் பல கருத்தான படங்களை திரையுலகம் மூலமாக தமிழ் மக்களுக்கு வழங்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன், அவர் வாக்குறுதி அளித்த படங்களை விரைந்து முடித்து வருகிறார். நடிகர் விஜயுடன் படம் இயக்குவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்டது
அப்போது பேசிய இயக்குனர் வெற்றிமாறன், "நாங்கள் இருவரும் இணைந்து படத்தை உருவாக்க வெகு ஆண்டுகளாக பேசிக்கொண்டு இருந்தோம். இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. விரைவில் எனது பிற படங்களை முடித்துவிட்டு அவருக்காக ஒரு கதைக்களத்தை தயார் செய்யவுள்ளேன்" என தெரிவித்தார்.