மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
I Am Thalapathy: சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்; நான் தளபதி தான் - தடாலடி பேச்சு.!
சமீப காலமாகவே தமிழ் திரையுலகில், விஜய் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே கடுமையான சண்டை நடந்து வந்தது. அதாவது, வசூல் மற்றும் விமர்சன ரீதியாக தொடர்ச்சியாக விஜய் படங்கள் வெற்றியடைந்து வருவதால், அவரே தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் என கூறி வந்தனர்.
திரைத்துறையை சேர்ந்த சில நடிகர்களும் அதனை வரவேற்றனர். ரஜினிகாந்துக்கு எதிரான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த சர்ச்சை தொடர்ந்து வந்தது. சர்க்கார் படத்தின்போதே அதற்கான முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், இவ்விஷயத்திற்கு தற்போது முற்றுப்புள்ளிவைத்துள்ள நடிகர் விஜய், தனது லியோ படத்தின் வெற்றிவிழாவில் பேசும்போது, "புரட்சித்தலைவர் ஒருத்தர் தான், நடிகர் திலகம் ஒருத்தர் தான், சூப்பர்ஸ்டார் ஒருத்தர்தான், உலகநாயகன் ஒருத்தர்தான், புரட்சிக்கலைஞர் ஒருத்தர்தான், தல ஒருத்தர் தான், மக்கள் தான் மன்னர்கள், நான் தளபதி, நீங்கள் என்னை வழிநடத்துபவர்கள்" என பேசினார்.