மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளையதளபதி விஜயிடம் கதறியழுத அவரது மகன்.. நடிகர் விஜயின் மகன் அழுகைக்கு காரணம் இந்த பெண்ணா.?
கோலிவுட் திரையுலகில் முண்ணனி நடிகராக நடித்து வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தமிழில் தொடர்ந்து பல வெற்றி படங்களை குடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் 'வாரிசு' திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதன்பின் இவர் நடிக்கும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
விஜய், அஜித் போன்ற நடிகர்கள் யாருக்கும் தெரியாமல் பலருக்கு உதவி வருகின்றனர் என்பது தெரிந்த விஷயமே. இதுபோன்ற நிலையில் யூ ட்யுப் சேனல் ஒன்றிற்கு பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் விஜயை பற்றி சுவாரசியமான பல சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
அப்பேட்டியில் அவர் கூறியதாவது, " பள்ளியில் நன்றாக படிக்கும் பெண் குழந்தையை பேட்டி எடுக்க சென்றேன். அப்பெண்ணின் குடும்ப வறுமையின் காரணமாக மேற்படிப்பை தொடர முடியவில்லை. இந்த செய்தியை என் பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தேன்.
இதனையடுத்து, நடிகர் விஜய் என்னை அவரது வீட்டிற்கு அழைத்து, இந்த செய்தியை காட்டினார். இந்த செய்தியை பார்த்த என் மகன் கண்கலங்கி அந்த பெண்ணிற்கு எதாவது உதவி செய்ய சொல்லி அழுதான். இதன்படி அந்த பெண்ணுக்கு படிப்பு சம்மந்தமாக எல்லாவித உதவியும் செய்கிறேன் என்று கூறி, அப்பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு குறிப்பிட்டிருக்கிறார்.