பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
சங்கர் மகள் அதிதி சங்கரா இது... என்ன இப்படி மாறிட்டாரே... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக இருக்கும் சங்கர் அவர்களின் மகள் தான் அதிதி சங்கர். இவர் மருத்துவ படிப்பு முடித்திருந்தாலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் நடிகையாக அவதாரம் எடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து விருமன் படத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் அதிதி. தற்போது அதிதி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் புத்தாண்டு ஸ்பெஷலாக புதிய கெட்டப்பில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அதிதி சங்கரா இது? இப்படி ஒல்லியாக மாறிட்டரே என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.