மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன சிம்ரன் இதெல்லாம்.. நீங்களும் இப்படி மாரிடீங்க...! பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது! வைரல் புகைப்படம்...
பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம், அண்ணன் தம்பி பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளது.
இந்த தொடரின் பெரிய வெற்றிக்கு பின்னால் இந்த தொடரில் வரும் கதிர் - முல்லை கதாபாத்திரம் ஒரு காரணம். முதலில் இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டஸ் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் அவரது இடத்தை நிரப்ப, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது முல்லையாக நடித்து வருபவர் காவியா. முதலில் ரசிகர்களிடயே பெரிய வரவேற்பு இவருக்கு இல்லை என்றாலும், இவருது நடிப்பு போக போக மக்கள் மனதில் சித்ரா போலவே இடம் பிடித்து விட்டார்.
மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பாரதி கண்ணம்மா சீரியலிலும் நடித்துள்ளார் காவியா. சீரியலில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார் அம்மணி. இந்நிலையில், மாடர்ன் உடையில் இடுப்பை காட்டி சொக்கியப்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்து என்ன சிம்ரன் இதலாம், நல்லா இல்லை, நீங்க அழகா இருக்கீங்க ஆன இது மாறிலாம் போட்டோ போடாதீங்க என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.