மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.. இதுக்கு முடிவே இல்லையா.! ராஷ்மிகாவை தொடர்ந்து வெளியான நடிகை கஜோலின் டீப்ஃபேக் வீடியோ!!
அண்மைக்காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டீப் ஃபேக் எனப்படும் போலி வீடியோக்களை வெளியிடுவது பெருமளவில் அதிகரித்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக இருப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
அதனால் நடிகை ராஷ்மிகா பெரிதும் மனமுடைந்து போனார். மேலும் பல திரைப்பிரபலங்களும் அதற்கு கண்டனம் தெரிவித்து டீப்ஃபேக் வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ராஷ்மிகாவை தொடர்ந்து தற்போது பிரபல பாலிவுட் நடிகை கஜோல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், நடிகை கஜோல் உடை மாற்றுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூம் ஒன்றில் ஆடை மாற்றும் இளம்பெண் ஒருவரது முகம் நடிகை கஜோலின் முகமாக எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டு ள்ளது. அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இவ்வாறு வீடியோக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.