மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே ஜாலிதான்.! கடலுக்கடியில் மீனாய் மாறிய நம்ம எதிர்நீச்சல் ஈஸ்வரி.! இந்த வீடியோவை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் பைவ் ஸ்டார் படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா. அப்படத்தைத் தொடர்ந்து அவர் சேரன் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ஆட்டோகிராப், அஜித் நடித்திருந்த வரலாறு, மாதவனின் எதிரி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். மேலும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட அவர் எக்கசக்கமான மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை கனிகா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் தொடரில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பு மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். நடிகை கனிகா 2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியமூட்டுவார். அவர் தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு மீனை போல கடலின் அடியில் நீந்தி எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.