மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜயின் மீது தீராத ஆசை கொண்டுள்ள இளம் நடிகை.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.?
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் விஜய். இவர் சமீபத்தில் நடித்த வெளியான 'வாரிசு' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. 'லியோ' படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுபோன்ற நிலையில், நடிகை கீர்த்தி செட்டி ஒரு பேட்டியில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய். அவருடன் சேர்ந்து ஒரு படமாவது நடிக்க மிகவும் ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.
மேலும் லியோ படத்திற்குப் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் தளபதி 68 படத்தின் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.