மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கீர்த்தி சுரேஷிற்கு பிடித்த ஆங்கில எழுத்து 'v' .. நடிகர் விஜயை குறிப்பிடுகிறாரா என்று நெட்டிசன்கள் கமெண்ட்.? வைரலான ட்விட்டர் பதிவு.!
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். முதன்முதலில் இவர் 2013ஆம் வருடம் வெளியான 'கீதாஞ்சலி' என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இதன்பின் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க தொடங்கிய கீர்த்தி சுரேஷ், 'இது என்ன மாயம்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சண்ட கோழி 2, அண்ணாத்தே, போன்ற திரைப்படங்களில் முண்ணனி நடிகர்களுடன் நடித்திருந்தார்.
இத்தைகைய நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் விஜயை இணைத்து கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இதன்படி கீர்த்தியை, நடிகர் விஜய் தனது கெஸ்ட் ஹவுஸில் தங்க வைத்ததாக செய்திகள் வெளியானது. மேலும் கீர்த்தியின் ரசிகர் ஒருவர் வரைந்த ஓவியத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த ஓவியத்தில் கீர்த்தியின் படத்துடன் 'v' என்று குறிப்பிட்டிருந்தது. இதன்படி கீர்த்தி சுரேஷின் பதிவில் 'v' என்று எங்கு இருந்தாலும் அதை கவனிப்பேன் என்று பதிவிட்டுள்ளார். இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்பதிவில் நடிகர் விஜயை தான் குறிப்பிடுகிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.