மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை இந்த சீரியல் நடிகைதானா.! தீயாய் பரவும் தகவல்.! யார்னு பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் அண்ணன், தம்பிகளின் பாசப்பிணைப்பை, கூட்டுகுடும்ப ஒற்றுமையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இத்தொடரில் தற்போது கதிர் மற்றும் முல்லை வீட்டை விட்டு வெளியேறி புதிய ஹோட்டல் தொடங்கி சுவாரஸ்யமான கதைக்களத்துடன் சென்றுகொண்டிருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா
நடித்து வருகிறார். துவக்கத்தில் விஜே சித்ரா முல்லையாக நடித்து வந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து காவ்யா தற்போது முல்லையாக நடித்து வருகிறார்
இந்த நிலையில் காவ்யாவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிந்து விலகியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதனை தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தில் சீரியலில் நடித்து பிரபலமான நடிகை லாவண்யா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது எந்தளவிற்கு உண்மை என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.