கழுத்தில் புது தாலியுடன்.. மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்த நடிகை மஹாலட்சுமி! வைரல் புகைப்படம்!!



actress-mahalakshmi-post-modern-image-after-marriage

சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக தனது கேரியரை தொடங்கியவர் மஹாலட்சுமி. அதனைத் தொடர்ந்து சன் டிவியில் அரசி என்ற தொடரில் நடித்ததன் மூலம் சீரியலில் என்ட்ரி கொடுத்த அவர் தொடர்ந்து பல தொலைக்காட்சிகளிலும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். நடிகை மஹாலட்சுமிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளநிலையில் கணவரை விவாகரத்து செய்தார்.

அதனைத் தொடர்ந்தும் பல சீரியல்களில் நடித்துவந்த அவர் தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை மஹாலட்சுமிக்கு நேற்று தயாரிப்பாளர் ரவீந்திரனுடன் திருமணம் நடைபெற்றது. அந்தப் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தநிலையில் அது வைரலாகி பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறினர்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிகை மகாலட்சுமி புது தாலியுடன் மார்டன் உடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர் வாழ்க்கை அழகாக இருக்கிறது. அதை நீங்கள் நடக்கச் செய்தீர்கள் என் புருஷா என்ற பதிவையும் வெளியிட்டுள்ளார்.