மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடல் பருமனை கிண்டல் செய்தவர்களுக்கு தக்க பதிலடி குடுத்த மஞ்சிமா மோகன்.. வாயடைத்து போன நெட்டிசன்கள்.!
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகையான மஞ்சிமா மோகன் ஆரம்ப காலகட்டத்தில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தன் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார். தமிழில் முதன் முதலாக 2016ஆம் வருடம் சிம்பு கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தில் அறிமுகமானார்.
மேலும், முதல் படத்திலேயே தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். பல பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் முடிசூடா மன்னன், தேவராட்டம் போன்ற படங்களில் நடித்து கொண்டிருந்தார். இதில் 'தேவராட்டம்' திரைப்படம் வெளிவந்த நிலையில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
இதன்பின் படவாய்ப்பு இல்லாததாலும், தனிபட்ட காரணங்களினாலும் சினிமாவில்.இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார். சில மருத்துவ காரணங்களினால் உடல் பருமனான மஞ்சுமா மோகன், சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியானபோது கேலிக்குள்ளானார்.
இதுபோன்ற நிலையில், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மஞ்சிமா மோகன் இன்ஸ்டாகிரம் பதிவில் ரசிகர் ஒருவர் "உங்கள் தோற்றத்தை கிண்டல் செய்யும் பதிவுகளை எப்பிடி எதிர்கொள்கிறீர்கள்" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மஞ்சிமா அவர்களை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டேன் அப்பதிவை பார்த்தால் சிரித்துகொண்டே கடந்து விடுவேன் என்று கூறியிக்கிறார். மேலும் இவருக்கும், நடிகர் கவுதம் கார்த்திக்கும் கடந்த வருடம் காதல் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.