திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரஜினியை பங்கமாய் கலாய்த்த நபர்.. ஆத்திரத்தில் சட்டையை பிடித்து பளார் விட்ட நடிகை; சுவாரசிய சம்பவம்.!!
நாடகத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமாகி மிகப்பெரிய நடிகையாக உருவெடுத்தவர் மனோரமா. இவர் காமெடி, குணச்சித்திர வேடங்கள் என்று பல கதாபாத்திரங்களின் நடித்துள்ளார்.
இவரின் திரையுலக வாழ்க்கையில் பல மொழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர் காலம் தொட்டு சிவாஜி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், கமல், ரஜினி, அஜித், விஜய், தனுஷ் என 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்த நடிகை என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
இவரை பலரும் ஆச்சி என்று அழைத்து வந்தனர். 1980ல் பில்லா திரைப்படத்தின் படப்பிடிப்பு மெரினா பகுதியில் படம்பிடிக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த நபர், ரஜினியை மோசமாக கிண்டல் அடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மனோரமா, அவரின் சட்டையை பிடித்து பாய்ந்து பளார் விட்டுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்த படக்குழு, அந்த நபரை வெளியேற்றி இருக்கிறது.
இதுகுறித்த வீடியோவை காண இங்கே அழுத்தவும்: https://youtu.be/dH_vJ-_YHjs